உடம்பில் 864 பூச்சிககளைப் பச்சை குத்திக்கொண்ட அரிய மனிதர்

319
Advertisement

உடம்பில் 864 பூச்சிகளைப் பச்சை குத்தி கின்னஸ் சாதனை புரிந்துள்ள நபர் இணையத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் மைக் அமோயா. தொழிலதிபரான இவர் திரைப்பட இசையமைப்பில் ஈடுபட்டுள்ளதுடன், வணிகத்திலும் ஈடுபட்டு வருகிறார். தனது 21 வயதில் எறும்பின் உருவத்தை பச்சைக் குத்தத் தொடங்கிய இவர், தற்போது எறும்பு, வண்டு, அந்துப்பூச்சி, சிலந்தி, தேள் உள்படப் பல்வேறு பூச்சிகளைப் பச்சைக் குத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கத் தொடங்கியுள்ளார்.

அவரது தொண்டை, மார்பின் குறுக்கே 13 அங்குல அந்துப்பூச்சி, இடது முன் கையில் 89 எறும்புகள், இடது முன் கையின் இருபுறங்களிலும் 36 எறும்புகள், வலது பின்புறக் கையில் 23 சிவப்பு எறும்புகள், வலது கண்ணின் மேல் இரண்டரை அங்குல வண்டு, வலது காதுக்குப் பின்னால் இரண்டரை இஞ்ச் சிலந்திகள், நீளமான கால்கள் கொண்ட மரவட்டை என்னும் 2 புழுக்கள் உள்பட 864 பூச்சிகள் மற்றும் பூச்சிகள் அல்லாதவற்றைப் பச்சைக் குத்தியுள்ளார்.

இவ்வளவு தைரியமான மைக் அமோயாவுக்கு சிறிய உயிரினங்களைக் கண்டால் பயம் வந்துவிடுமாம்.

அமோயாவின் இந்தச் செயல் தெனாலி படத்தில் வரும் கமல்ஹாசனின் நடிப்புபோல் அமைந்துள்ளது. நண்டைக் கண்டாலும் பயம், வண்டைக் கண்டாலும் பயம், பூச்செண்டைக் கண்டாலும் பயம், நாயைக் கண்டாலும் பயம், எலியைக் கண்டாலும் பயம், பாம்பைக் கண்டாலும் பயம், பூரானைக் கண்டாலும் பயம் என்று டாக்டராக நடித்திருக்கும் ஜெயராமிடம் தன் பயத்தைப்போக்க ஆலோசனை கேட்பதுபோல அமைந்துள்ளது அமோயாவின் செயல்.

ஒருவேளை அந்த பயத்தைப் போக்குவதற்காக இப்படியொரு முயற்சியில் இறங்கியிருப்பாரோ அமோயா?