“பாஜகதான் பா.ம.க-வின் முதல் எதிரி”

282

சென்னையில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய டாக்டர் ராமதாஸ், பாஜகவில் ஆர்எஸ்எஸ் கொள்கைகள் இருப்பதால் அது ஒரு வழிப்பாதை என்றும் அங்கு இளைஞர்கள் சென்றால் திரும்பமாட்டார்கள் என்றும் கூறினார்.

இளைஞர்கள் பாஜகவில் சேருவதை பாமக முக்கிய நிர்வாகிகள் தடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பாஜகதான் பாமகவின் முதல் எதிரி என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாமகவின் புதிய தலைவராக அன்புமணி தேர்வு செய்யப்பட்டபிறகு, அனைத்துக் கட்சித் தலைவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசி வருகிறார்.

ஆனால் அன்புமணி இதுவரை பாஜக தலைமையை சந்தி்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.