சொந்தமாக விமானம் தயாரித்து ஆசிரியப்படுத்திய  இளைஞர்-விரைவில் மத்திய அரசு அனுமதி 

288
Advertisement

ராஜஸ்தான் மாநிலம் சுறு மாவட்டத்தை சேர்ந்த பஜ்ரங், மெக்கானிக்காக இருக்கும் இவர், சொந்த விமானத்தை உருவாக்கி அசத்தியுள்ளார்.சிறுவயதில் விமான நிலையத்தில் ,விமானம் மேலே எழுவதை  பார்க்க ஆசையாக சென்றபோது அங்கிருந்த பாதுகாவலர் உள்ளே விட மறுத்துள்ளார்.இந்த சம்பவம் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியது என்கிறார் அந்த இளைஞர்.

அப்போது முடிவு செய்தார், சொந்தமாக விமானம் தயாரித்து பார்க்கவேண்டும் என்று.வெறும் ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்து,தற்போது மெக்கானிக்காக இருக்கும் பஜ்ரங் இதற்காக தன் முழு கவனத்தை செலுத்தி,8 ஆண்டுகள் உழைத்து ,இரு இருக்கைகளை கொண்ட விமானம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

இந்த விமானம் மணிக்கு 180 கிமீ வேகத்தில் பறக்கும் என்றும் இந்த விமானத்தை தயாரிக்க சுமார் 15 லட்சம் ரூபாய் செலவிட்டதாக கூறுகிறார் பஜ்ரங்.மேலும்  பல சவால்களை கடந்து,பலரின் சிறு உதவிகளுடன் மற்றும் தொழிலில் கிடைக்கும்  வருமானத்தில் பெரும்பகுதியை விமானம் தயாரிப்பதற்காக செலவிட்டதாக கூறுகிறார்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த விமானத்தில் ‘மாருதி’ வேகன்ஆர் காரின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது,விமானத்தின் உடல் அலுமினிய ஸ்டீலில் இரும்பிலும், இறக்கைகள் அலுமினியத்திலும்,வெளிப்புற இறக்கைகள் மரத்தால் செய்யப்பட்டவை. அதே சமயம் முன் கண்ணாடி பிளாஸ்டிக்கால் ஆனது. இதன் எரிபொருள் டேங்க் 45 லிட்டர். இது பெட்ரோலில் இயங்கும் என்றும், 150 கிமீ வரை பறக்க முடியும் என்றும் கூறுகின்றனர். விமானத்தை இயக்க, கணினி மற்றும் மொபைலில் ஜிபிஎஸ் அமைப்பு உள்ளது.இந்த விமானத்தை அதிகாரப்பூர்வமாக இயக்க கூடிய விரைவில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு பரிந்துரைக்க உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.