விராட் கோலிக்கு T20 போட்டியில் வாய்ப்பு மறுக்கப்பட்டதா? உண்மையை உடைத்த ராகுல் டிராவிட்

186
Advertisement

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட 50 ஓவர் கிரிக்கெட் தொடரானது  இறுதிகட்டத்தை அடைந்து விட்டது. முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா தொடரை கைப்பற்றியது.

இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையே 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளில் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒரு புறம் இருக்க, சீனியர் வீரர்களுக்கு இனி T20 போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது போன்ற கருத்துக்களை பிசிசிஐ கூறி வருகிறது. இதுகுறித்து பேசியுள்ள, இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட், ஒவ்வொரு போட்டிக்கும் முக்கியத்துவம் கொடுத்து அனுமானங்களை வளர்த்து கொள்ள வேண்டாம் எனவும், ஒருநாள் கிரிக்கெட் தொடர்கள், பார்டர் கவாஸ்கர் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து 6 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி மற்றும் ரோஹித் ஓய்வெடுத்துவிட்டு புத்துணர்ச்சியோடு அடுத்தடுத்த போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என்றும் அவர்களின் திறமையின் மீது எந்த சந்தேகமுமில்லை எனவும் பேசியது கோலி ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விட செய்துள்ளது.