இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டில் வெளியான திரைப்படம் புஷ்பா 1. இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் கடந்த 5ம் தேதி வெளியானது.
புஷ்பா 2 வெளியான முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் செய்து வருகிறது. இதற்கிடையில் புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் ஷோ திரையிடப்பட்ட போது அல்லு அர்ஜுன் படம் பார்க்க வந்ததாகவும் அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் உயிரிழந்ததாகவும் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இது ஒரு புறம் இருக்க இன்னொருபுறம் புஷ்பா 2 திரைப்படம் வசூல் சாதனை படைத்துள்ளது. படம் வெளியாகி 25 நாட்கள் ஆன நிலையில் தற்போது வரை ரூ.1760 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.