Sunday, December 22, 2024

வடையில் செத்துக்கிடந்த பூரான்….வாடிக்கையாளர் அதிர்ச்சி

நிலக்கோட்டையில் டீக்கடையில் வாங்கிய வடையில், பூரான் செத்து கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே, அக்கரகாரப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் மதுரை ரோட்டில் உள்ள டீக்கடையில் வடைகளை வாங்கியுள்ளார். அப்போது உறவினர்களுடன் சேர்ந்து அதனை சாப்பிட்ட போது, பூரான் செத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Latest news