Tuesday, December 16, 2025

பஞ்சாப் தேசிய வங்கியில் வேலை வாய்ப்பு : தமிழ்நாட்டில் எத்தனை பணியிடங்கள்?

பஞ்சாப் தேசிய வங்கி (PNB) உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேசிய அளவிலும், தமிழ்நாட்டிலும் பணியிடங்கள் கிடைக்கின்றன.

பணியிட விவரங்கள்

  • பதவி: உள்ளூர் வங்கி அதிகாரி (Local Bank Officer (LBO))
  • காலிப்பணியிடங்கள்: 750
  • தமிழ்நாட்டில்: 85 (எஸ்சி – 12, எஸ்டி – 6, ஒபிசி – 22, EWS – 8, பொது – 37, மாற்றுத்திறனாளிகள் – 3)
  • சம்பளம்: ரூ.48,480 – 85,920
  • கல்வி தகுதி: டிகிரி
  • வயது வரம்பு: 20-30 வயது
  • பணி அனுபவம்: ஒரு வருடம்
  • மொழி திறன்: தமிழ்நாட்டில் பணியிடங்களுக்கு தமிழ் மொழித் திறன் அவசியம் (பேசவும், எழுதவும், படிக்கவும்).

விண்ணப்பிக்கும் முறை

  • விண்ணப்பம் ஆன்லைனில் மேற்கொள்ளவேண்டும் (https://pnb.bank.in/)
  • விண்ணப்ப நாள்: 03.11.2025 முதல் 23.11.2025 வரை
  • கட்டணம்: வழக்கமானோர் ரூ.1180, SC/ST/PwBD பிரிவினர்கள் ரூ.59
  • கட்டணம் ஆன்லைன் மூலம் செலுத்தலாம்

தேர்வு முறை

  • மொத்தம் 4 கட்டங்கள்: எழுத்துத் தேர்வு, உள்ளூர் மொழி தகுதித் தேர்வு, நேர்காணல்
  • எழுத்துத் தேர்வு: 150 மதிப்பெண்கள், நெகட்டிங் மார்க் உள்ளது
  • 10 மற்றும் 12-ம் வகுப்பில் தமிழ் மொழியை படித்தவர்கள் உள்ளூர் மொழி தேர்வில் இருந்து விலக்காகிறார்கள்
  • நேர்காணல்: 50 மதிப்பெண்கள்
  • தேர்வுக்கான மையங்கள்: சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சேலம், கன்னியாகுமரி, விருதுநகர்

பணிக்கு ஆர்வமுள்ள, தகுதியுள்ளவர்கள் வந்தவுடன் விரைவில் விண்ணப்பிக்க வேண்டுகிறோம்.

Related News

Latest News