Saturday, May 24, 2025

ரிஷப்பை ‘அவமானப்படுத்திய’ Prince திமிரு, தலைக்கனம் ‘கொந்தளிக்கும்’ ரசிகர்கள்!

இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாக பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட், சமீபகாலமாக பார்மின்றித் தவித்து வருகிறார். இதற்கு அவருக்கு நேர்ந்த கார் விபத்தும் முக்கியக் காரணமாகும். என்றாலும் அடுத்த தோனியாக பார்க்கப்பட்ட பண்ட், நடப்பு IPL தொடரில் சரியாக பெர்பார்ம் செய்யாமல் சொதப்பி விட்டார்.

இதனால் வலிமையான அணியாக இருந்தும் கூட, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் Play Off வாய்ப்பினை இழந்து வெளியேறி இருக்கிறது. என்றாலும் மே 22ம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில், நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பெற்றது.

இந்தநிலையில் போட்டிக்கு பிறகு குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில், லக்னோ கேப்டன் ரிஷப் பண்டினை அவமதித்து விட்டதாக ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். இந்திய அணியை பொறுத்தவரை கில்லுக்கு சீனியர் ரிஷப் தான். சொல்லப்போனால் அடுத்த கேப்டனாக BCCI ரிஷப்பினை தான் பார்த்தது.

அவரின் போதாத காலம் இழந்த பார்மினை மீட்டெடுக்க முடியாமல் திணறி வருகிறார். இதனால் கில்லுக்கு டெஸ்ட் கேப்டன் பதவியை வழங்கிட BCCI முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. நிலைமை இப்படியிருக்க மைதானத்தில் ரிஷப்பின் பேச்சை நின்று கேட்காமல், அவரை அவமதித்து சென்றிருக்கிறார் கில்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதுகுறித்து ரசிகர்கள், ” அவரு என்ன சொல்றாருன்னு சாருக்கு நின்னு கேட்க முடியல. தலைக்கனம், திமிரு எல்லாமே ரொம்ப அதிகமா இருக்கு, ” என்று கில்லை, ‘எண்ணெய் சட்டியில் போடாத குறையாக’ வறுத்தெடுத்து வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news