Saturday, August 2, 2025
HTML tutorial

‘தமிழக’ வீரரை திட்டித் தீர்த்த சிராஜ் : கைகட்டி ‘வேடிக்கை’ பார்த்த Prince

சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இடையிலான போட்டியில், குஜராத் வீரர் முஹம்மது சிராஜின் செயல், ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அணியின் டெவன் கான்வே, உர்வில் படேல் இருவரும் களத்தில் நின்றபோது குஜராத்தின் சிராஜ் பந்துவீச வந்தார். அவரின் பந்தில் சிங்கிள் தட்டிவிட்டு உர்வில் ஒரு ரன் எடுக்க ஓடினார். அப்போது GT கேப்டன் சுப்மன் கில் பந்தை Direct Hit அடிக்க முயல, பந்து Overthrow ஆகியது.

இதனால் கான்வே – உர்வில் மீண்டும் ஒரு ரன் ஓடினர்.  Overthrow ஆன பந்தை தமிழக வீரர் சாய் கிஷோர் தடுப்பதற்குப் பதிலாக, தட்டிவிட்டு விட்டார். இதைப்பார்த்த உர்வில் – கான்வே கூட்டணி 3வது ரன்னையும் ஓடியே எடுத்து விட்டனர்.

இதனால் கடுப்பான சிராஜ் கேப்டன் என்பதால், சுப்மன் கில்லை விட்டுவிட்டு சாய் கிஷோர் மீது கோபத்தைக் காட்டி பந்தினைத் தூக்கி எறிந்தார். கடைசியாக கேப்டன் கில், சிராஜ் அருகே வந்து அவரை சமாதானப்படுத்தினார். என்றாலும் சிராஜின் முகம் மாறவில்லை. கோபத்துடனேயே காணப்பட்டார்.

மற்றொரு சோகமாக 4 ஓவர்களில் 47 ரன்களை விட்டுக்கொடுத்த சிராஜால், கடைசிவரை ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை. இதைப்பார்த்த ரசிகர்கள், ” சாய் கிஷோர் மட்டும் என்ன தக்காளி தொக்கா? கேப்டன் கிட்டயும் உங்க வீரத்தைக் காட்ட வேண்டியது தானே,” என்று சிராஜை வச்சு செய்து வருகின்றனர்.

முன்னதாக லக்னோவிற்கு எதிரான போட்டியில் நிக்கோலஸ் பூரனை சீண்டி, அவரிடமும் சிராஜ் வாங்கிக் கட்டிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News