பிரதமர் மோடியை சந்தித்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்

233

ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிர்-அப்துல்லாஹியன், 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக இந்தியா வந்த அவர், டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான நாகரீக தொடர்புகளை மேலும் மேம்படுத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர்-அப்துல்லாஹியனை வரவேற்பதில் மகிழ்ச்சி என்று குறிப்பிடுள்ளார்.

முன்னதாக ஹொசைன் அமிர்-அப்துல்லாஹியன், மத்திய வெளியுறவுத்துறை மைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.