2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பட்ஜெட்டில் செல்போன், மின் வாகனங்களில் பயன்படுத்தும் லித்தியம் பேட்டரிகளுக்கான வரி குறைக்கப்படுகிறது என பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மின்சார வாகனம் மற்றும் மொபைல் போன்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.