சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,11,600-க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், பார் வெள்ளி 2.65.000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.1200 குறைந்த நிலையில், இன்று மாலை மீண்டும் ரூ.400 குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,900க்கு விற்பனையாகிறது. இதேபோல், சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,11,200க்கு விற்பனையாகிறது
