Thursday, February 19, 2026

முதல்வர் ஸ்டாலினுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒரு வாரம் சிகிச்சையில் இருந்த அவர், கடந்த ஞாயிற்று கிழமை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்பின்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ. வேலு, தேமுதிக நிர்வாகிகள் சுதிஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related News

Latest News