Thursday, March 27, 2025

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் சிசு உயிரிழப்பு

கோயம்புத்துாரில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக திருப்பதி வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கர்ப்பிணி பெண் ஒருவர் பயணித்துள்ளார். அங்கு போதையில் இருந்த சிலர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அப்போது இளம் பெண் கூச்சலிட்டதால் போதை நபர்கள் இளம்பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஹேமராஜ் என்ற நபரை கைது செய்தனர்.

ரெயில்வே தண்டவாளத்தில் விழுந்து கிடந்த கர்ப்பிணியை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்துள்ளது.

Latest news