பிரசாந்த் கிஷோர் குழுவினரை ஹோட்டலில் சிறை வைத்த போலீசார்

218
prashant kishor
Advertisement

திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக திரிபுராவில் கள ஆய்வு மேற்கொள்ள சென்ற பிரசாந்த் கிஷோர் குழுவினரை, போலீசார் ஓட்டலில் சிறை வைத்தனர்.

திரிபுராவில் முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஆதரவு எவ்வாறு உள்ளது என்பதை அறிய, அரசியல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோருக்கு சொந்தமான ‘ஐபேக்’ நிறுவன ஊழியர்கள் திரிபுரா சென்றனர்.

அகர்தலா சென்ற 22 ஊழியர்களையும், ஓட்டலை விட்டு வெளியேற போலீசார் அனுமதிக்கவில்லை’ என, அவர்கள் புகார் தெரிவித்தனர்.

கொரோனா விதிகள் அமலில் உள்ளதால், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான நடைமுறை தான் என்றும், பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement