Saturday, May 10, 2025

போர் பதற்றம் : பஞ்சாப், ஹரியானாவில் மின்சாரம் துண்டிப்பு

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்திவருகிறது. இந்த தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் எல்லையோர மாநிலமான பஞ்சாப்பில், பாகிஸ்தானின் டிரோன்கள் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அம்மாநிலத்தின் ஜலந்தர் பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹரியாணா மாநிலம் அம்பாலா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

Latest news