கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கரூர் விஜய் பிரச்சாரத்தின் போது 41 பேர் பலியான விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவலை பரப்பியதாக பிரபல யூட்யூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.