Tuesday, December 3, 2024

திருமணமான பிரபலத்துடன் காதல்…உடலாலும் மனதாலும் காயம்..ஆண்ட்ரியா பகீர் தகவல்!

‘இதுவரை இல்லாத உணர்விது’, ‘மாலை நேரம்’ பாடல் தொடங்கி ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் வரை தமிழ் இசைப்பிரியர்களை தனது வசீகரிக்கும் குரலால் கட்டிப்போட்டவர் ஆண்ட்ரியா.

பாடகராக மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து, நடிகையாகவும் தனக்கான அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார். அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த ஆண்ட்ரியா இடையில் இரண்டு வருடங்கள் இடைவெளி எடுத்துக்கொண்டார்.

அதற்கான விளக்கமாக அண்மையில் அவர் பகிர்ந்துள்ள செய்தி அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. திருமணமான பிரபலம் ஒருவருடன் காதல்வயப் பட்டு இருந்ததாகவும், உடலாலும் மனதாலும் ஏற்பட்ட காயத்தினாலேயே இடைவெளி எடுத்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிக மன அழுத்தத்திற்காக ஆயுர்வேதா சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் தற்போது தான் அந்த வலியில் இருந்து மெல்ல மீண்டு வருவதாகவும், குறிப்பிட்டுள்ள ஆண்ட்ரியா அந்த பிரபலத்தின் பெயரை கூற விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் படத்தில் comeback கொடுத்த ஆண்ட்ரியாவின் ‘அனல் மேலே பனித்துளி’ ‘வட்டம்’ போன்ற இந்த வருடம் வெளியான படங்கள் சினிமா ஆர்வலர்களிடம் கணிசமான வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest news
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!