‘வாரிசு’  ரிலீஸ் சர்ச்சையில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்த பிரபல இயக்குநர்!

169
Advertisement

2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வாரிசு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில், தெலுங்கு படத் தயாரிப்பாளர்கள் சங்கம் எழுப்பிய பிரச்சினை விவாதங்களை கிளப்பியுள்ளது.

பண்டிகைகளின் போது தெலுங்கு மொழிப் படங்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அச்சங்கம் முடிவெடுத்துள்ள நிலையில் பல்வேறு திரைப்பிரபலங்களும் வாரிசு பட ரிலீசுக்கு ஆதரவாகவும், தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய கோரியும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ‘சண்டக்கோழி’, ‘ரன்’, ‘பையா’ ஆகிய படங்களை இயக்கிய லிங்குசாமி, இதுவரை பண்டிகை நாட்களில் பல தெலுங்கு படங்கள் தமிழ்நாட்டில் வெளிவந்துள்ளது எனவும், அதைப் பற்றி பிரச்சினைகள் எழுந்ததில்லை என்றும் கூறியுள்ளார்.

இவ்வாறான முடிவுகள், பிற்காலத்தில் தெலுங்கு படங்கள் தமிழ்நாட்டில் வெளியாவதை பாதிக்க கூடும் என்பதால், தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.