Tuesday, July 1, 2025

டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபை தொகுதிக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மொத்தம் 699 பேர் போட்டியிட்டனர்.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி 57.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் பதிவான வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news