தமிழகத்தில் ஆளும் திமுகவினர் ஒன்றிய அரசு கொண்டு வந்த மும்முனைக் கல்வி கொள்கை எதிர்த்து பல்வேறு கட்ட போராட்டங்கள் செய்து வருகின்றனர்.
ரயில் நிலையத்தில் எழுதப்பட்ட போர்டுகளில் ஹிந்தி வாசகங்கள் கருப்பு மையால் அளித்த திமுக சட்டதிட்ட குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ், தன் பேரனை ஹிந்தி படிக்க வைத்திருக்கிறார் என பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
அண்ணாமலை பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பொள்ளாச்சி தனியார் பள்ளி முன்பு திமுக சட்டதிட்ட குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் தலைமையில் திரண்ட திமுகவினர், அண்ணாமலையை ஆடு என்று குறிக்கும் வகையில், தனது பேரனின் மார்க் சீட்டை ஆட்டுக்குட்டியிடம் காண்பித்து படித்து பார்க்கச் சொல்லி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர் .