Thursday, March 20, 2025

குடும்ப தகராறு காரணமாக காவலர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர், சென்னை மீனம்பாக்கம் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த சிலநாட்களாக குடும்ப தகராறு காரணமாக மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், காவலர் கார்த்திகேயன் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயிரிழந்த காவலர் கார்த்திகேயன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். குடும்பத் தகராறு காரணமாக காவலர் கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும், தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest news