அனைத்து மாநில போலீசாருக்கு ஓர் அறிவுறுத்தல்

260

நபிகள் நாயகம் குறித்து பாஜகவில் இருந்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு முக்கிய நகரங்களில் போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.

வாகனங்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.

பல இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நடைபெற்றன.

இதில் பலர் காயமடைந்தனர். இந்நிலையில், மாநில அரசுகள், காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை காக்க தயார் நிலையில் இருக்கும்டி உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.