கர்நாடகாவில் போக்குவரத்து விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை வாகனங்களில் பொருத்திய வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அளித்த வினோத தண்டனை இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அதிக சத்தமாக ஹாரன் அடித்த கல்லூரி பேருந்தை மடக்கிய போலீசார், சம்பந்தப்பட்ட ஓட்டுநரை கீழே இறக்கி வாகனத்தின் முன் நிற்கவைத்து ஹாரன் அடித்தனர். அதிக சத்தத்தை தாங்க முடியாமல் ஓட்டுநர் அலறுவதை பார்த்த, போலீசார் மக்கள் அலறுவதை சுட்டிக்காட்டி உடனடியாக ஹாரனை அகற்றுமாறு அறிவுறுத்தினர்.