சேலம், கெஜ்ஜல் நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் ரேவதி. இவர் வசித்து வரும் குடியிருப்பின் முதல் தளத்தில் பாஜக இளைஞர் அணியின் கிழக்கு ஒன்றிய செயலாளரான மதியழகன் வசித்து வருகிறார். இதில், வீட்டின் மொட்டை மாடியில் ரேவதி துணி துவைத்த போது, அதன் நுரை தண்ணீர் மதியழகனின் மனைவி ரம்யாவின் மீது பட்டதில் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த சண்டையில் ஆத்திரமடைந்த ரம்யாவின் கணவரும் பாஜக நிர்வாகியுமான மதியழகன், வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து ரேவதியை வெட்ட சென்றதும், இதனால் பயந்து போய் வீட்டிற்குள் ஓடி ரேவதி கதவை தாழிட்டு கொண்ட நிலையில், கதவை மதியழகன் அரிவாளால் வெட்டி உடைத்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதில், பக்கத்து வீட்டில் வசித்து வரும் ராகுல் என்பவர் மதியழகனை தடுத்து நிறுத்தி தட்டிக்கேட்டிருக்கிறார். அப்போது ராகுலை மதியழகன் அரிவாளால் தலையில் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தால் பகுதியே களேபரமான நிலையில். ராகுலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், பாஜக நிர்வாகி மதியழகனைகைது செய்து சிறையில் அடைத்தனர்.