தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த பறையப்பட்டி புதூரில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் பறையப்பட்டி கிராமத்தை சேர்ந்த 7ம் வகுப்பு மாணவன் உணவு அருந்திவிட்டு தண்ணீர் குழாயில் கை கழுவ சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த சாந்தி என்ற பெண் அந்த மாணவனை சாதி பெயரை சொல்லி திட்டியுள்ளார். இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளிக்கப்பட்டது. தனை தலைமை ஆசிரியர் கண்டும் காணாமல் இருந்துள்ளார். உடனடியாக சாந்தியை கைது செய்ய கோரி கோபிநாதம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து பள்ளி மாணவர்களை சாதி பெயரை சொல்லி திட்டி அவமானப்படுத்திய சாந்தி என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் மனநல காப்பகத்தில் ஒப்படைத்தனர். நடவடிக்கை எடுக்காத ஆசிரியர் தமிழ்ச்செல்வி, கிருஷ்ணன் ஆகிய இருவரையும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்தனர்.