காற்றடைத்து ஓட்டிச்செல்லும் ஸ்கூட்டர்

300
Advertisement

காற்றடைத்து ஓட்டிச்செல்லும் புதிய வகை ஸ்கூட்டரை ஜப்பானில் மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

டோக்யோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்த ஸ்கூட்டருக்கு பொய்மோ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் காற்றடைத்து மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம்.
குழந்தைகள் விளையாடுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த பொய்மோ ஸ்கூட்டரில் ஒன்றரை மணி நேரம் பயணிக்கலாம்.

Advertisement

நான்கு சக்கரங்கள் கொண்டுள்ள இந்த பொய்மோ ஸ்கூட்டர் தெர்மோ பிளாஸ்டிக் பாலியூரிதீனால் உருவாக்கப்பட்டுள்ளது. காற்றை அடைத்தால் இரண்டு சக்கர வாகனமாக உடனே மாறிவிடுகிறது. காற்றை வெளியேற்றிவிட்டால் பைபோல சுருங்கிவிடுகிறது.

எங்கு வேண்டுமானாலும் இந்த ஸ்கூட்டரைக் கொண்டுசெல்லலாம்.

மின்சார மோட்டாரால் இயக்கப்படும் சிறிய கம்ப்ரஸரைப் பயன்படுத்தி 2 நிமிடங்களில் காற்றடைத்து பொய்மோ ஸ்கூட்டரை இயக்கத்திற்கு கொண்டுவந்து விடலாம்.

பெட்ரோல் விலை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், காற்றடைத்து இயக்கக்கூடிய பெட்ரோல் உருவாக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.