Monday, February 10, 2025

‘உன் மூஞ்சிய பார்த்தா வெறி வர்ற மாதிரி தெரியலயே’.. நிர்வாகிகளை கடிந்துகொண்ட அன்புமணி

சேலத்தில் இன்று நடைபெற்ற பாமக கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது : “இதே மாவட்டத்தில் தனியாக நின்று 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். இப்போது கூட்டணியில் இருந்தும் 2 தொகுதிகளைத்தான் வென்றுள்ளோம். அப்படி என்றால் நாம் வளர்ந்திருக்கிறோமா?

தமிழ்நாட்டில் யாரைக் கேட்டாலும் பாமக சிறந்த கட்சி என்று சொல்வார்கள். நல்ல கொள்கை, கோட்பாடு, தொலைநோக்குப் பார்வை உள்ள கட்சி என்று சொல்வார்கள். ஆனால், இந்த செய்திகளை களத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பது இல்லை.

நாம் இழந்த வாக்குகளை எல்லாம் மீண்டும் வர வைக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றன. நம்மைப் போல யாராலும் உழைக்க முடியாது, ஆனால் ஏதோ ஒரு தொய்வு இருக்கிறது.

வெறி வரவேண்டும். 10 மாதங்கள் தான் இருக்கின்றன. பல்லைக் கடித்துக் கொண்டு களத்தில் இறங்குங்க.. வெறி வருமா? என்ன.. உன் மூஞ்சிய பார்த்தா வெறி வர்ற மாதிரி தெரியலயே.. என்ன ராமகிருஷ்ணா.. கோபம் வந்துடுச்சா?” என நிர்வாகிகள் பெயரைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார் அன்புமணி.

Latest news