திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இதையொட்டி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மு.க. ஸ்டாலின் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.