குஜராத் மாநிலத்தில் 242 பயணிகளுடன் அகமதாபாத்தில் இருந்து லண்டன் கிளம்பிய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 133 பேர் உயிரிழந்தனர்.
விமானம் பி.ஜே. மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்கள் விடுதியில் உள்ள உணவகத்தை மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் விழுந்த நேரத்தில், அந்தக் கட்டடம் முழுக்க தீப்பற்றி எரிந்ததாகவும் கூறப்படுகிறது.

மருத்துவர்கள் விடுதியில் உணவருந்திக் கொண்டிருந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பல மருத்துவ மாணவிகள் பலியாகியுள்ளதாகவும், பலர் சிக்கியுள்ளதாகவும் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.