Friday, December 5, 2025

மனிதனுக்கு பன்றியின் கல்லீரல்! நோயாளிக்கு என்ன ஆனது?

மனிதனுக்கு மனிதன் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், ஒரு பன்றியின் கல்லீரலை எடுத்து, ஒரு மனிதனுக்குப் பொருத்தினால் என்ன ஆகும்? இது ஏதோ சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தோட கதை இல்லை. சீனாவில் நடந்த ஒரு நிஜமான மருத்துவ அதிசயம்!

உலகிலேயே முதல் முறையாக, மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஒரு பன்றியின் கல்லீரலை, உயிருடன் இருந்த ஒரு மனிதருக்கு வெற்றிகரமாகப் பொருத்தி, சீன மருத்துவர்கள் ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியிருக்காங்க!

யாருக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது?

கல்லீரல் புற்றுநோய் மற்றும் சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 71 வயது முதியவர் ஒருவருக்குத்தான் இந்த ஆபரேஷன் செய்யப்பட்டது. அவருக்கு மனிதர்களிடம் இருந்து கல்லீரல் தானம் கிடைப்பது சாத்தியமில்லாத நிலைமையில், மருத்துவர்கள் இந்த புரட்சிகரமான முடிவை எடுத்திருக்கிறார்கள்.

இது எப்படி சாத்தியமானது?

இது சாதாரணப் பன்றி இல்லை. இது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஒரு ஸ்பெஷல் பன்றி! மனித உடம்பு, பன்றியின் உறுப்பை ஒரு அந்நியப் பொருளாக நினைத்து நிராகரிக்காமல் இருக்க, அந்தப் பன்றியின் DNA-வில் 10 விதமான மாற்றங்களை விஞ்ஞானிகள் செஞ்சிருக்கிறார்கள்!

அறுவை சிகிச்சைக்குப் பிறகு என்ன நடந்தது?

ஆச்சரியமான விஷயம் என்வென்றால், ஆபரேஷனுக்குப் பிறகு முதல் ஒரு மாசம், அந்தப் பன்றியின் கல்லீரல், அந்த மனிதரின் உடம்பில் ரொம்ப அருமையாக வேலை செய்திருக்கிறது! பித்தநீரைச் சுரந்தது, ரத்தம் உறைவதற்கான காரணிகளை உருவாக்கியது, எந்தவிதமான நிராகரிப்பு அறிகுறியும் இல்லை!

இது ஒரு மிகப் பெரிய வெற்றி!

ஆனால், 38-வது நாள், ஒரு சின்னப் பின்னடைவு ஏற்பட்டது. ரத்த உறைதல் தொடர்பான ஒரு பிரச்சனை ஏற்பட்டதால், மருத்துவர்கள் அந்தப் பன்றியின் கல்லீரலை அகற்ற வேண்டியதாயிற்று.

அந்தப் பிரச்சனையையும் மருத்துவர்கள் சரி செய்த்திருக்கிறார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, வேறு சில உடல்நலப் பிரச்சனைகளால், அந்த நோயாளி 171-வது நாள் உயிர் நீத்தார்.

அவர் 171 நாட்கள் உயிர் பிழைத்ததே, இந்தத் துறையில் ஒரு மிகப் பெரிய மைல்கல்! இது என்ன சொல்கிறது என்றால், எதிர்காலத்தில், மனித உறுப்புகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும்போது, பன்றியின் உறுப்புகளைப் பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும் என ஒரு பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News