நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து சர்ச்சையான கருத்துக்களை பேசி வருகிறார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதற்கிடையே நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர்.
சீமான் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்து, சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுகவை சேர்ந்த புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
தேர்தல் பொதுக் கூட்டங்களில் கடுமையான, மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவது, தந்தை பெரியார் உள்ளிட்ட திராவிட இயக்க தலைவர்களை கொச்சைப்படுத்தி ஏளனமாக பேசுவது மற்றும் மதம், ஜாதி, இனம் என பேசி கலவரத்தை ஏற்படுத்த தொடர்ந்து முயற்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளன.