தாஜ்மஹாலின் அறைகளை திறக்க வேண்டும்!-  உயர்நீதிமன்றத்தில் மனு

161
Advertisement

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் இந்து சிலைகள் மற்றும் கல்வெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய 20 அறைகளை திறக்க இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரி பாரதிய ஜனதா கட்சியின் அயோத்தி மாவட்ட ஊடகப் பொறுப்பாளர் டாக்டர் ரஜ்னீஷ் சிங் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் , தாஜ்மஹாலில் உள்ள சுமார் 20 அறைகள் பூட்டப்பட்டுள்ளன, யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த அறைகளில் இந்து கடவுள்களின் சிலைகள் மற்றும் புனித நூல்கள் இருப்பதாக நம்பப்படுகிறது,

உண்மைகளைக் கண்டறிய இந்த அறைகளைத் திறக்க ஏஎஸ்ஐக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் நான் மனு தாக்கல் செய்துள்ளேன் என்று கூறினார்.

Advertisement

மேலும் மனுவில்,  இந்த அறைகளை ஆய்வு செய்து, அங்குள்ள இந்து சிலைகள் அல்லது புனித நூல்கள் தொடர்பான ஆதாரங்களைத் தேடும் ஒரு குழுவை அமைக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.