பொங்கல் முடிந்து சென்னை திரும்புவோரின் வாகன நெரிசலை குறைக்க 3 நாட்களுக்கு காவல்துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
அதன்படி திருப்போரூர் வழியாக சென்னைக்குள் நுழையும் கனரக வாகனங்கள் செங்கல்பட்டு வழியாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாதாரண வாகனங்கள் ஒரகடம் சந்திப்பில் இருந்து திரும்பி, ஸ்ரீபெரும்புதூர் வழியாக செல்லமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
வெளியூரில் இருந்து சென்னை வரும் கனரக வாகனங்கள், பரனூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கனரக வாகனங்கள் ஜிஎஸ்டி, ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் செல்ல பகல் 2 மணி முதல் வருகின்ற 20ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்தை விரைவுபடுத்த ஆம்னி பஸ்கள் வெளிவட்ட சாலை வழியாக திருப்பி அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.