நாகையில் மழை ஓய்ந்து, 4 நாட்களாகியும் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீர் வடியாததால் குடியிருப்புவாசிகள் அவதி அடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம் காடம்பாடி NGO காலணியில், 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையால், இங்குள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.
இந்த நிலையில், மழை ஓய்ந்து, 4 நாட்களாகியும் மழைநீர் வடியாததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். எனவே வடிகால்களை முறையாக தூர்வாரி, மீண்டும் மழைநீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.