பிரதமர் மோடியை சந்திப்பவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை கட்டாயம்

கொரோனா தொற்று மீண்டும் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 7,000 பேருக்கு கொரோனா பரவல் ஏற்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால் பிரதமர் மோடியை பார்க்க வரும் அனைவருக்கும் ஆர்டி பிசிஆர் பரிசோதனை கட்டாயம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, 7 எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் இன்று மாலை பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேச உள்ளனர். அவர்களுக்கு இந்த சோதனை நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News