தமிழ்நாடு அரசு, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு மாவட்டங்களில் பட்டா இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், சுமார் 86,000 பேர் பட்டா பெற உள்ளனர்.
குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 32 கிலோமீட்டர் தொலைவில் குடியிருப்பவர்களுக்கு, அவர்களின் நீண்ட கால ஆக்கிரமிப்பு நிலையை தீர்த்து, பட்டா வழங்குவதற்கு அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும், மதுரை, நெல்லை போன்ற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளிலும், மாவட்டத் தலைநகரப் பகுதிகளிலும் 86,000 ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதன் மூலம், 29,187 பேர் சென்னையில் மற்றும் 57,084 பேர் மதுரை, திருவள்ளூர், திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களில், மொத்தமாக 86,000 பேர் பட்டா பெறுவார்கள். இந்த பட்டா வழங்கும் நடவடிக்கையை 6 மாத காலத்தில் முடிக்க, மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் இரண்டு குழுக்களையும் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
பட்டா வழங்குவது தொடர்பான தமிழ்நாடு அரசு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், நீர் நிலை, மேய்ச்சல் நிலம், கோயில் நிலம் மற்றும் உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படாது. சென்னையில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு மற்றும் பிற பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும். 3 லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களுக்கு இலவசமாக பட்டா வழங்கப்படும்.
இது தவிர, சென்னையில் 32 கிலோமீட்டர் தொலைவில் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட காலமாக குடியிருப்பவர்கள், அந்த ஏரியாவில் உள்ள பெல்ட் ஏரியாவில் 6 மாதத்திற்குள் பட்டா பெறுவார்கள். மதுரை, திருவள்ளூர், திருநெல்வேலி போன்ற மாநகராட்சிகளிலும் இதே பிரச்சனைகள் உள்ளன. இங்கு உள்ளவர்களுக்கும் பட்டா வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
6 மாதங்களில் பூர்த்தி செய்யும் பட்டா வழங்கும் நடவடிக்கையில், நகராட்சி, மாநகராட்சி, மற்றும் மாவட்ட அளவில் குழுக்களும், சென்னையில் மாநில அளவில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகாரப்பூர்வமான பட்டா வழங்கும் செயல்முறை, தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் அல்லது அருகிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் உத்தியோகபூர்வ அலுவலகங்களில் பெற முடியும்.
இந்த விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்களாக,
1. குடும்ப அட்டை
2.ஆதார் கார்ட்
3.3 லட்சம் ரூபாய்க்கு குறைவான வருமானம் உள்ளதற்கான ஆவணம்
4.நிலத்தில் வசித்து இருந்த ஆதாரங்கள் போன்றவை தேவைப்படுகின்றன.