Monday, July 7, 2025

விமானிக்கு திடீர் உடல்நிலை குறைபாடு – விமானத்தை ஒட்டிய பயணி !

போக்குவரத்து சேவைகளில் உலகின் முக்கிய சேவையாக விமானசேவை உள்ளது.விமானத்தை ஓடுவதற்கு தனி சிறப்பு பயிற்சி வேண்டும்.நடுவானில் பயணிகள் கடவளை நம்புகிறார்களோ இல்லையோ , கண்டிப்பாக விமானியை நம்பித்தான் விமானத்தில் பயணிக்கின்றனர்.

சமீப காலமாக , வாகனங்கள் விபத்திற்குள் ஆவது போலவே விமான விபத்துகளும் தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறிவிட்டதோ என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்நிலையில் , தனி விமானம் ஒன்று விபத்திற்குள் ஆகா இருந்த நிலையில் விமானத்தில் பயணித்த  பயணி விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளார்.

தன்  கர்ப்பிணி மனைவியைப் பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருக்கும் தன் வீட்டிற்கு  தனி விமானத்தில் செல்ல முடிவு செய்த நபர் ஒருவர்,திட்டமிட்ட படி  பயணத்தை தொடங்கினார். தகவலின் படி அவருடன் அமெரிக்காவின் புளோரிடாவை  நோக்கிச் சென்ற ஒற்றை எஞ்சின் கொன்டா செஸ்னா 208 கேரவன் விமானத்தை இயக்கிய விமானிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அந்த தனி விமானத்தில் இருவர் மட்டுமே பயணித்துள்ளனர்.நடுவானில் விமானிக்கு தீடிர் உடல்நல குறைபாடு ஏற்பட்டுள்ளது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து  விமானத்தை தானே தரையிறக்க முடிவெடுத்தார் அந்த நபர்.ஆனால் பிரச்சனை என்னவென்றால் அவருக்கு விமானத்தை எப்படி இயக்குவது என்ற தெரியாது.

அதையடுத்து ,Palm Beach விமானநிலைய கட்டுப்பட்டு அறையை தொடர்புகொண்ட அந்த நபர் ,தன் விமானிக்கு திடிர்யென உடல்நல குறைபாடு ஏற்பட்டுள்ளது.அவரால் விமானத்தை இயக்கமுடியவில்லை  ,தனக்கு தன்னை செய்வது என்ற தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

சூழ்நிலையை புரிந்துன்கொண்ட விமானநிலைய கட்டுப்பாடு அறை அதிகாரிகள், அவரிடம் விமானத்தை எப்படி தரையிறக்குவது என அறிவுறுத்தல்கள் வழங்கினர்.அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றி அதன்படி பத்திரமாக விமானத்தை தரையிறக்கினார் அந்த நபர்.

மோசமான சூழ்நிலையாக மாறுவத்திற்கு முன் , விபத்தை தடுத்து தைரியாக , முன்னனுபவம் ஏதும் இன்றி விமானத்தை தரையிறக்கிய நபருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news