கடந்த 2022ஆம் ஆண்டு பரங்கிமலை ரயில் நிலையத்தில் சதீஷ் என்ற இளைஞர் சத்யபிரியா என்ற மாணவியை ரயில் முன்பு தள்ளிவிட்டு படுகொலை செய்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் தன்னுடன் பேசியதை நிறுத்தியதால் மாணவி சத்யபிரியாவை, சதீஷ் ரயில் முன்பு தள்ளி கொலை செய்தார் எனத் தெரியவந்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளி சதீஷ்க்கு கடந்த ஆண்டு அல்லிக்குளம் மகளிர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில் குற்றவாளி சதீஷுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் 20 வருடங்களுக்கு தண்டனை குறைப்பு எதுவும் வழங்கக்கூடாது” என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
