Saturday, December 6, 2025

சூடானில் நோயாளிகள் உள்பட 460 பேரைக் கொன்ற துணை ராணுவம்

சூடானில், அரசுக்கு எதிரான உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வரும் துணை ராணுவப் படை எல் – ஃபேஷர் நகரத்தைக் கைபற்றி அங்குள்ள மக்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டு வருவதாக ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் வடக்கு தர்ஃபூர் மாகாணத்தின் தலைநகர் எல் – ஃபேஷரில் உள்ள சௌதி மகப்பேறு மருத்துவமனையில், நேற்று (அக். 28) துணை ராணுவப் படை வீரர்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் என சுமார் 460-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுகுறித்த விசாரணை துவங்கப்பட்டுள்ளதாக துணை ராணுவப் படையின் தளபதி ஜெனரல் முகமது ஹம்தான் டகலோ தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News