இதெற்கெல்லாம் பான் கார்டு கட்டாயம்..

500
pan-card
Advertisement

வங்கி, தபால் அலுவலகம், கூட்டுறவு வங்கிகளில் நடப்புக் கணக்கு அல்லது ரொக்க கடன் கணக்கு துவங்கும்போதும், ஆதார் அல்லது பான் எண் கட்டாயம் எனவும் கூறியுள்ளனர்.

மேலும் ஒரே நிதியாண்டில் ரூ.20 லட்சத்துக்கு மேல் பணம் செலுத்தினாலோ அல்லது எடுத்தாலோ, பான் மற்றும் ஆதார் எண் தெரிவிப்பது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தற்போது மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ள புதிய விதியில், இனி ஒரு நிதியாண்டில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கணக்குகளில் இருந்து, ஒருவர் 20 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்தாலும், போட்டாலும் பான் எண் அல்லது ஆதார் எண் கட்டாயம் ஆகிறது.

இதனால் ஒரு நிதியாண்டில், ஒருவர் மொத்தம் எவ்வளவு பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளார். அதற்கு வரிப்பிடித்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை வரி துறையினர் எளிதாக அறிந்துகொள்ள முடியும்.

மேலும் இந்த புதிய விதிகள் இம்மாதம் 26-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.