புது மாப்பிள்ளையான காவல்துறை அதிகாரி ஒருவர் தனது மனைவியை சைக்கிளில் அழைத்துச்சென்றது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ஒரு காவல்துறை அதிகாரி சுற்றுச்சூழல் பாதுகாப்பைத் தனது திருமணத்திலிருந்தே தொடங்கியுள்ளார்.
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த அந்தக் காவல்துறை அதிகாரி சந்தோஷ் படேல்.
சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர் தனது திருமணத்தை சுற்றுச்சூழலைப் பாதிக்காதவண்ணம் நடத்த முடிவுசெய்தார். இதற்காகத் திருமணத்தின்போது கார் பயன்படுத்துவதையும், கேமரா பயன்படுத்துவதைத் தவிர்த்தார்.
திருமணத்தன்று தலைப்பாகை அணிவதற்குப் பதிலாகப் பனையோலை கிரீடம் அணிந்தார்.
திருமணம் முடிந்ததும் புது மனைவியை சைக்கிளில் அழைத்துச்சென்றார்.
சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க இந்தக் காவல்துறை அதிகாரி முன்னுதாரணமாக செயல்பட்டது அனைவரின் பாராட்டையும் பெற்றுவருகிறது.