ஈரோட்டில் 50,088 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியை, கேரளா மக்களும் பாராட்டுகின்றனர். அத்திக்கடவு, அவினாசி திட்டத்தின் மூலம் ஈரோட்டில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்கிறது.
ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் மறைவு எனக்குள் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவு ஈரோடு மக்களுக்கு மட்டுமல்ல. தமிழகத்திற்கே இழப்பு. வெறும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டுவிட்டு அதை கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் முந்தைய அ.தி.மு.க., அரசு மாதிரி இல்லை இந்த அரசு.
வயிற்றெரிச்சல் காரணமாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி புலம்பிகிட்டே இருக்கிறார். எதிர்க்கட்சி தலைவர் ஆளுங்கட்சியை விமர்சிக்கலாம் தவறு கிடையாது. நியாமான புகார்களை சொல்லலாம். தி.மு.க., ஆட்சி மீது குற்றம்சாட்ட ஏதும் கிடைக்காமல் பொய் சொல்லக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.