Friday, April 25, 2025

“நீ இஸ்லாமியர் இல்லை” எனக் கூறி துப்பாக்கியால் சுட்டார்கள் – பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் பேட்டி

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சின்னாறு எல்லை பகுதிக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்ட பெண் அளித்த பேட்டியில், தனது கணவருடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்ததாகவும், அப்போது அங்கு வந்த தீவிரவாதி, துப்பாக்கி முனையில் தனது கணவரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை கேட்டதாகவும் கூறினார். மேலும் “நீ இஸ்லாமியர் இல்லை” எனக் கூறி கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும் அந்த பெண் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

இந்த தம்பதி திருமணம் முடிந்து தேனிலவு சுற்றுப்பயணத்துக்காக காஷ்மீர் வந்த இடத்தில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.

Latest news