Wednesday, December 17, 2025

பஹல்காம் தாக்குதல் : பாகிஸ்தான் மக்கள் சொல்லும் கருத்து என்ன?

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலை கண்டிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியா வந்த பாகிஸ்தானியர்கள் பலர் தங்கள் நாட்டுக்கு திரும்புவதற்காக நேற்று வாகா எல்லையில் குவிந்தனர். அவர்களில் அகமது என்பவர் கூறும்போது, பஹல்காம் தாக்குதலை யார் செய்து இருந்தாலும் தவறானதாகும். நாங்கள் இந்தியாவுடன் சகோதரத்துவத்தையும், நட்புறவையும் விரும்புகிறோம் என கூறினார்.

மற்றொருவர் கூறியதாவது : பஹல்காம் தாக்குதல் ஒருபோதும் நடந்திருக்கக்கூடாது என்றாலும், அனைத்து பாகிஸ்தானியர்களையும் இந்தியாவை விட்டு வெளியேறச் சொல்வது சரியான முடிவு அல்ல.” என்று கூறியுள்ளார்.

Related News

Latest News