காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.