மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டு மொத்தமாக 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
7 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 19 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 23 பெண்கள் விருதுகளை பெறவுள்ளனர்.
கலைத்துறையில் நடிகர் அஜித் குமார், நடிகை சோபனா சந்திரகுமார், தொழில் மற்றும் வர்த்தகம் துறையில் நல்லி குப்புசாமிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கும் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.