Thursday, July 3, 2025

Ice Cream நல்லதா? கெட்டதா?

உடல் எடையை குறைக்க முயற்சி எடுப்பவர்கள் மற்றும் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பலரும் ஐஸ் கிரீம் உடல் நலத்திற்கு கேடு தரும் உணவுப் பொருள் என கருதி, அதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர்.

ஆனால், ஐஸ் கிரீம் முற்றிலும் கெடுதல் தரும் உணவு அல்ல எனக் கூறும் மருத்துவர்கள், ஐஸ் கிரீமில் இருந்து நமக்கு தேவையான ப்ரோடீன், மினெரல்ஸ், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் Flavanoids கிடைப்பதால், சீரான இடைவெளியில் சாப்பிடுவது தவறல்ல என கருத்து தெரிவிக்கின்றனர்.

நாவிற்கு சுவையூட்டுவது மட்டுமின்றி, மகிழ்ச்சியை தூண்டும் ஹார்மோன்களை ஐஸ் கிரீம் அதிகரிப்பதால் மனது சரியில்லாத போது சாப்பிடுவது பயன் தரும்.

ஐஸ் கிரீமில் உள்ள பால் மற்றும் கிரீமினால் கிடைக்கும் கொழுப்பு சத்துக்கள், வளரும் குழந்தைகளின் உடல் நலனுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என குறிப்பிடும் உணவியல் நிபுணர்கள், நடுத்தர வயதுக்கு மேல் உள்ளவர்கள் செயற்கை நிறமிகள் இல்லாத low fat வகைகளை அளவோடு சாப்பிட வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news