ஆர்டர் செய்தது கேமராவுக்கு வந்தது பெயின்ட் டப்பா…

33
Advertisement

பிளிப்கார்ட்டில் கேமராவுக்கு ஆர்டர் கொடுத்த நபருக்கு
பெயின்ட் டப்பா வந்த அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை, திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் விநோத்.
தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வரும் இவர்
Flipkart இணையதளத்தில் 28 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள
kenon EOS 3000 D கேமராவுக்கு ஆர்டர் கொடுத்துள்ளார்.

மிகுந்த சந்தோஷத்துடனும் எதிர்பார்ப்புடனும் காத்திருந்த
விநோத்துக்கு வந்தது என்ன தெரியுமா?-

Advertisement

குழந்தைகள் விளையாடப் பயன்படுத்தும் பழைய
பிளாஸ்டிக் பொம்மைக் கேமராவும், காலி பெயின்ட் டப்பாவும்தான்.
கனவுக் கோட்டையோடு இருந்த விநோத்துக்கு இந்த ஏமாற்றம்
பெருத்த அதிர்ச்சியைக் கொடுத்தது.

பிளிப்கார்ட் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு கேட்ட விநோத்துக்கு
சரியான பதில் வரவில்லை. உடனே, வண்ணாரப்பேட்டை போலீசில்
புகார் அளித்துள்ளார்.

ஏமாறுவோர் இருக்கும்வரை ஏமாற்றுவோரும் இருக்கத்தான் செய்வார்கள்.
இனியாவது விழிப்போடு இருக்க வேண்டும். நேரில் சென்று பார்த்து
பொருளையும் தரத்தையும் விலையையும் உறுதிசெய்து வாங்குவது
மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தரும். விலைகுறைவு
சலுகை வழங்கப்படுகிறது என்பதற்காகவோ, சோம்பல் காரணமாகவோ
ஆன்லைனில் பொருட்கள் வாங்க முயன்ற சிலருக்கு இதுபோன்ற கசப்பான
ஏமாற்றங்கள் புது அனுபவங்களைத் தந்துள்ளன.

ஷாப்பிங் என்பது மகிழ்ச்சியான மனநிறைவான விஷயம்.
அதை ஆன்லைனில் தவறவிடலாமா?