புது டிரசுக்கு ஆர்டர், வந்தது பழைய டிரஸ்

310
Advertisement

புதுவித ஆன்லைன் மோசடி வியாபாரம்

கொரோனா ஊரடங்கு ஒவ்வொருவரையும் ஒவ்வொருவிதத்தில்
பாதித்துள்ளது. சிக்கன் பிரை ஆர்டர் செய்தவருக்கு பழைய டவலை
பொரித்து அனுப்பியிருந்தது ஓட்டல் நிர்வாகம்.

இந்த அதிர்ச்சி முடியும் முன்பே அடுத்த அதிர்ச்சி நடந்தேறியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த குடும்பத் தலைவி ஒருவர் தனது
ஓய்வுநேரத்தை மொபைல் போனில் செலவிட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது அவர் கண்களில் பளிச்சென்று பட்டது ஆரஞ்சு நிற
நீளமான குர்தாவும் நீலநிறக் குர்தாவும்.

ஊரடங்கில்தான் ஜவுளிக் கடைகள் மூடப்பட்டுள்ளதே…அத்தியா
வசியமான ஆடைகளை சுலபமாக ஆன்லைனில் வாங்கிக்கொள்ள
லாமே என்கிற ஆவலில் இரண்டு குர்தாக்களுக்கு ஆர்டர் கொடுத்
துள்ளார்.

அவர் ஆன்லைனில் ஆர்டர் செய்ததற்குக் காரணமே… குர்தாக்களை
டெலிவரி செய்தபின் பணம்கொடுத்தால் போதும் என்பதுதான்.

ஏமாறமாட்டோம் என்கிற ஆழ்ந்த நம்பிக்கையில் செய்த இந்தக்
குடும்பத் தலைவியின் நம்பிக்கையை நூதன முறையில் தகர்த்
தெறிந்துள்ளது டெல்லியிலுள்ள ஒரு நிறுவனம்.

ஆர்டர் கொடுத்த 5 நாட்களில் டெல்லியிலிருந்து குடும்பத் தலைவி
கொடுத்த முகவரிக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. ஆவலோடு பார்சலைப்
பிரித்துப் பார்த்தவர் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

ஆன்லைனில் பார்த்துத் தேர்வுசெய்து ஆர்டர் கொடுத்த டிரசுக்கும்
டெலிவரி கொடுத்த டிரசுக்கும் சம்பந்தமே இல்லை. பழைய ஆடை
ஒன்றை புத்தம்புதிதுபோல் மடித்து நன்றாகக் கூரியர் கவரில் வைத்து
அனுப்பியிருந்தது அந்த பிராடு நிறுவனம்.

டெலிவரி செய்த கூரியர் பையனோ பணத்தை வாங்கிச் சென்றுவிட்டான்.
பின்னர், கூரியர் பையனிடம் செல்போனில் தொடர்புகொண்டு கேட்டது
தனக்கு எதுவுமே தெரியாது என்று கூறிவிட்டான்.

டிரஸ் டெலிவரி செய்த கவரிலிருந்த அனுப்புநர் முகவரி செல்போனைத்
தொடர்புகொண்டபோது அது போலி என்று தெரியவந்தது.அதிலுள்ள
முகவரியிலும் போலி என்றுதெரியவந்தது.

வெளியூருக்குச் சென்றிருந்த அவர் கணவர் வீடு திரும்பும் நாளில்
கணவரைப் புத்தாடையுடன் வரவேற்க வேண்டும் என்று ஆசை
ஆசையாய்க் கனவுகளுடன் எதிர்பார்த்திருந்தவருக்கு இந்த
அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் தவித்தார்.
பணத்தையும் நிம்மதியையும் இழந்து, தான் ஏமாற்றமடைந்ததை
ஜீரணிக்கமுடியாமல் புலம்பிக்கொண்டிருக்கிறார் இந்தக் குடும்பத் தலைவி.

ஆனாலும், தன்னைப்போல் பிறரும் ஏமாந்துவிடக்கூடாது என்னும்
நல்லெண்ணத்தில்,”இனி. யாரும் ஆன்லைனில் ஆர்டர் செய்த
பொருட்களைக் கொண்டுவந்து தரும்போது பார்சலைப் பிரித்துப்
பார்த்து ஒரிஜினல் பொருட்கள்தானா என்பதை உறுதிசெய்துகொண்ட
பிறகே பணத்தைக்கொடுக்க வேண்டும்”என்கிறார்.

அதைவிட, ”கடைகளுக்கு நேரில்சென்று வாங்குவதே சிறந்தது”என்பதும்
இந்தக் குடும்பத் தலைவியின் அறிவுரை.

”தொழில்நுட்பத்தை இதுபோன்ற பிராடுகளும் பயன்படுத்தி ஏமாற்றி
வருவதால் நல்ல நிறுவனங்களுக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படும்”என்பது
இந்தக் குடும்பத் தலைவியின் கருத்து-